23

Dear murugappan,

FORM, FORMLESNESS AND FORMLESS- FORM: SYMBOLISATION OF SHIVA IN ICONIC FORMS

URUVAM, ARUVAM AND ARUVURUVAM: (roopa, aroopa and aroopa-roopa)(உருவம்,அருவம்,அருவுருவம்)
The verse six of the SGB tells the three types of the form of sivam.
 we see in the Chidambaram three forms of siva. They are
1.the nataraja (uruvam)
2. an empty chamber  (aruvam)
3. aruvuruvam(Siva lingam)     
The empty chamber in chit-sabai is very popular among people. This is called the chithambara rahasyam. The rahasya is that god is formless, invisible and omnipresent.
The aruvuruvam is the lingam. Formless-form. Nobody can say what the form is. Yet a form. It is very abstract. This formless form is lingam.
The nataraja is the uruvam. Here god takes the form of a man there fore he is in a roopa state.
The sivagnana bodham describes the need for these three concepts.

உணருரு அசத்தெனின் உணரா தின்மையின்
இருதிற னல்லது சிவசத் தாமென
இரண்டு வகையின் இசைக்கும்மன் னுலகே.

Sivagnana swamigal dharumapuram adheenam explains this ,
சூத்திரம் என்னுதலிற்றோவெனின் சத்தும் அசத்தும் வரைசெய் துணர்த்துதனுதலிற்று.
என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின் சூத்திரக் கருத்துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள் மேலைந்து சூத்திரத்தானுங் கூறிப்போந்த பொருள்களுள் யாது சத்து யாது அசத்தென்னும் ஐயநீக்குதற்குச் சத்தினியல்பும் அசத்தினியல்பும் இவையென அவ்விரண்டும் இலக்கணத்தாற் றம்முண் மயங்காதவாறு வரைந்துவைத்துணர்த்தி உண்மை யதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யுமுகத்தானே இலக்கண வோத்துட் கூறுதற்கு எஞ்சிநின்ற பதிப்பொருள திலக்கணங் கூறுதல் இவ்வாறாஞ் சூத்திரத்தின் கருத்து என்றவாறு.
இதனானே சூத்திரவியைபும் இனிது விளங்கும்.
இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு : தம்முணர்வின் தமியாகிய முதற்பொருள் அளவைகளானறியப்படும் இயல்பிற்றெனின், அங்ஙனம் அறியப்படும் பிரபஞ்சம்போல் அழிபொருளாகிய அசத்தாம்; எவ்வாற்றானும் அறியப்படாத இயல்பிற்றெனின், அங்ஙன மறியப்படாத முயற்கோடுபோலச் சூனியப் பொருளாம்; ஆகலான் இவ்விரு பகுதியுமன்றி ஒருவாற்றா னறியப்படாமையும் ஒருவாற்றா னறியப்படுதலுமாகிய இரண்டு வகையானுஞ் சிவசத்தாமெனக் கூறுவர் மெய்யுணர்வின் நிலைபெற்றுயர்ந்தோர் என்றவாறு.
உணருரவெனி னசத்தென மாறுக. எனினென்பது முன்னருஞ் சென்றியைந்தது. முற்றும்மைகள் தொக்கன. அல்லதென்பது வினையெச்சக் குறிப்புமுற்று. அன்றியாமென இயையும்.
ஒருவாற்றானறியப்படாமை பாசஞான பசுஞானங்களான் அறியப்படாமை. ஒருவாற்றானறியப்படுதல் சிவஞான மொன்றானே அறியப்படுதல். பாசஞான பசுஞானங்களான் அறியப்படாமையிற் சிவமாதலும் பதிஞானத்தால் அறியப்படுதலிற் சத்தாலும் பெறப் படுமென்பார், இரண்டுவகையிற் சிவசத்தாமென இசைக்கு மென்றார். சிவசத்தென்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன் முடிபு. சடமாகிய சத்தினீக்குதற்குச் சிவசத்தென்றார். சிவசத்தென்பது சித்துச் சத்தென்னும் பொருட்டு. எழுவாய் மேலைச்சூத்திரத்தினின்றும் வருவித்துரைக்கப்பட்டது. இருதிறனுமன்றி இரண்டு வகையானுஞ் சித்தாதலுஞ் சத்தாதலு முடையனாய் நிற்றல் முதல்வனுக் கிலக்கணமென இலக்கணமும் இதனுட் போந்தவாறுணர்க.
முதல்வனுக்குப் பொதுவியல்பு மேற்புனருற்பவமுணர்த்து முகத்தாற் கூறிப் போந்தமையின் இது சொரூபலக்கணமெனப்படுஞ் சிறப்பிலக்கணமெனக் கொள்க. அற்றாகலினன்றே இதனை இலக்கணவோத்துள் முதற்கட்கூறாது உண்மையைச் சாரவைத்து இறுதிக்கட் கூறியதூஉமென்க. இன்னும் முதல்வனுக்குளவாகிய சிறப்பியல்புக் குணங்களெல்லாம் இவ்விரண்டனுளடங்கும். அஃதறிந் தடக்கிக் கொள்க. “தன்னாலே தனையறிந்தாற் றன்னையுந் தானே காணும்என்பதாம்உன்னரிய திருவருளை யொழியமல முளதென்றுணர்வரிதா மதனுண்மை தெரிவரிதா முனக்கேஎன்பதாம், “மாயைமா மாயை மாயாவருமிரு வினையின் வாய்மை யாயவா ருயிரின் மேவு மருளெனி லொளியாய் நிற்கும்என்பதாம் ஓதியவாற்றால் ஏனைப்பசுபாசங்களுஞ் சிறப்பியல்புபற்றியுணர்தல் சிவஞானத்தானன்றி அமையாதாயினும் +“தீபமெனத் தெரிந்தாங் கொருவியான் மாவினுண்மை யுணர்ந்தவர் தமையுணர்ந்தோர் தருமிது பசுஞானம்எம், + “இவைகீழ் நாடலாலே காதலினா னான்பிரம மென்னு ஞானங் கருதுபசு ஞானம்எம் பொதுவியல்பு பற்றி பாசவுணர்விற்கு அவற்றது பொதுவியல்பு விடயமாதல் கண்கூடாகப் பெறப்படுதலானும், அவை ஒருவாற்றா னுணருருவாதலு முடைமையிற் சிவசத்தாவான் செல்லாமை யறிக. சற்காரிய வாதங்கூறுஞ் சைவசித்தாந்தத்தில் அசத்தென்பது சத்துக்கு மறுதலையன்மையான் அப்பசுபாசங்கள் அங்ஙனமறியப்படும் பொதுவியல்புபற்றி அசத்தெனப்படுமாயினுஞ் சிறப்பியல்பு பற்றி அசத்தாதல் செல்லாமையிற் சிறப்பியல்பு நோக்கும்வழி அவை சத்தாதற் கிழுக்கின்மையுமறிக. இங்ஙனஞ் செவ்வனே யிறுக்க அறியாதார் அபாவத்தினியல்பாவது பாவத்திற்கு மறுதலைப் பொருள் போலுமென நையாயிகர் முதலியோர் மதம்பற்றி மயங்கி எல்லாப் பொருளுஞ் சத்தென்னுஞ் சித்தாந்தத்தோடு முரணாமைப் பொருட்டு ஈண்டுச் சத்து அசத்தெனப்பட்டனவும் சித்து அசித்தென்னும் பொருளவாமெனவும், சுத்தம் அசுத்தமென்னும் பொருளவாமெனவும் உரைத்திடர்ப்படுவர். காரியப்பிரபஞ்சம் ஏனைப் பசுபாசங்கள் போலன்றி இருவகையியல்பானுங் காட்சிப் புலனாய் இத்துணைப் பொழுது நிற்குமென நம்மனோரால் அறிய வாராது நிலைபெறுவது போலத் தோன்றிவிரையக் கெட்டு மறைந்து போதற் சிறப்புடைமை பற்றி அதுவே ஈண்டு உணருருவசத்தென் றெடுத்துக் கொள்ளப்பட்டது. அசத்தெனவே அசித்தென்பதுந் தானே போதரும்.
இதனுள் உணருருவசத்தெனி னுணராதின்மையினென்றது ஓரதிகரணம்; இருதிறனல்லது சிவசத்தாமென இரண்டுவகையி னிசைக்கு மன்னுலகே யென்றது ஓரதிகரணம்; ஆக இரண்டதி கரணத்தது இச்சூத்திரமென்றுணர்க.

1.UNAR-URU YENIN ASATHU: உணர் உரு எனின் அசத்து
The sivam if it has a identifiable image then it would only mean to people a perishable object.(like the anthropomorphic image lord nataraja)
2.UNAR-AADHU YENIN INMAI:உணராது எனின் இன்மை
 The sivam if it has no image at all then no one will easily understand it. (like the chidhambara rahasyam)
3.IRU-THIRAN OR IRANDU-VAGAI SIVASATHU: இரு திறன் ஓர் இரண்டு வகை சிவசத்து
This form is either identifiable and un- identifiable . that is by the higher knowledge of sivam we can understand this image. But by lower mundane human knowledge we cannot imagine this to anything. (This form is the siva-lingam).
Thus,
1.FORM=ROOPAM=URUVAM=NATARAJA
2.FORMLESS=AROOPA=ARUVAM=RAHASYAM
3.FORMLESS FORM=AROOPAROOPA=ARUVURUVAM=SIVA-LINGAM

 The sivagnanabodham clears these basic issues in the 6th sutra.

Shall write more on these lines,
Affectionately
Gandhibabu.


Comments

Popular posts from this blog