28
Dear murugappan,
SIVAGNANABODHAM 4 AND 5th
sutra elaborate the mind body issues in detail and I shall discuss about
them now to you.
Sivagnanabodham 4&5th sutra:
நான்காம் சூத்திரம்
அந்தக் கரணம் அவற்றினொன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மாச் சகச மலத்து உணராது
அமைச்சுஅரசு ஏய்ப்பநின்று அஞ்ச அவத்தைத்தே
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை : என் நுதலிற்றோ எனின், இதுவும் அது.
முதல் அதிகரணம்
மேற்கோள் : ஈண்டு, இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாய் உள்ள மனோ புத்தி அகங்கார சித்தங்களில்ஒன்று அன்று என்றது.
ஏது : அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.
உதாரணம் :
மனம் ஆதியால் உணர்தல் மன்னு புலன்கள்
மனம் ஆதி மன்புலனின் அல்லன் - மனமேல்
உதித்து ஒன்றை உள்ளம் உணர்தல் அதனில்
உதிக்கும் கடல்திரையை ஒத்து 23
சிந்தித்து ஆய்ச் சித்தம் தெளியாதாய் ஆங்காரம்
புந்தியாய் ஆய்ந்து மனமாகிப் - பந்தித்து
வெவ்வேறு தானே துணிந்து உள்ளம் இவ்வேறாம்
அவ்வேறாம் போதுபோல் ஆங்கு
அகாரம் உகாரம் அகங்காரம் புத்தி
மகாரம் மனம் சித்தம் விந்து - பகாது இவற்றை
நாதம் உளவடிவாம் நாடில் பிரணவமாம்
போதம் கடற்றிரையே போன்று
எண்நிலவு ஓங்காரத்து ஈசர் சதாசிவமாம்
நண்ணிய விந்துவொடு நாதத்து - கண்ணில்
பகர் அயன்மா லொடு பரமன் அதிதெய்வம்
அகரஉக ரம்மகரத் தாம்
இரண்டாம் அதிகரணம்
மேற்கோள் : இனி, இவ்வான்மாச் சகச மலத்தினால் உணர்வு இன்று என்றது.
ஏது : அதுதான் ஞானதிரோதகமாய் மறைத்துகொடு நிற்றலான்
உதாரணம் :
மாய தனுவிளக்காம் மற்று உள்ளம் காணாதேல்
ஆயாதாம் ஒன்றை அதுவதுவாய் - வீயாத
வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்றாம் காட்டம்போல்
தன்னை மலம் அன்றணைதல் தான்
மூன்றாம் அதிகரணம்
மேற்கோள் : இனி, இவ்வான்மா, சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீமாயுள்ள பஞ்சஅவத்திதனாய் நிற்கும் என்றது.
ஏது : அதுதான் மல சொரூபத்தின் மறைந்து அரூப சொரூபியாய் நிற்றலான்.
உதாரணம் :
ஒன்று அணையா மூலத்து உயிர் அணையும் நாபியினில்
சென்றணையும் சித்தம் இதயத்து - மன்ற ஏய்
ஐயைந்தாம் நல்நுதலில் கண்டத்தின் வாக்காதி
மெய்யாதி விட்டு அகன்று வேறு
இலாடத்தே சக்கிரத்தை எய்திய உள்ளம்
இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் - இலாடத்தே
அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டு அதுவே
அவ்வவற்றின் நீங்கல் அது ஆங்கு
FOURTH SUTRA
The soul is not one of the
inner faculties. But being without knowledge owing to Innate
Impurity, it is associated
with them like a king with his ministers, and has five states.
1. The soul is not one of the
inner faculties, Manas, Buddhi, Ahamkāra, and Citta:
for they are light and not
light.
(a) The knowledge which Manas
and the other inner faculties have of sense-objects, and
the knowledge which the soul
has of what rises above Manas, arise like waves in the sea.
Manas and the other inner
faculties are different from the senses; and soul is different
from Manas and the other
inner faculties.
(b) The soul as Citta is
aware (of something); as Manas it receives the sense-impressions;
as Ahamkara it questions
(these data); and as Buddhi it decides what the object is.
Therefore because the soul
functions in each of these ways, it is other than the inner
faculties, just as Time is
other than (its measuring agents, the sun and moon and stars).
(c) A causes Ahamkāra to
function; U, Buddhi; M, Manas; Bindu causes Citta to
function; and Nāda, the soul.
Thus knowledge is like the waves in the sea. If you take
these letters together, they
form the Pranava (AUM).
(d) When one considers the
presiding deities for Nāda and Bindu which are associated
with AUM, which dwells in the
knowledge of the inner faculties, they are Sadāśiva and
Īśvara. In M, U, and A the
deities are the Supreme and Māl and Ayan.
2 The soul is without
knowledge because of Innate Impurity: for Innate Impurity is the obscurer of
knowledge and hides it.
(a) The soul knows nothing
unless it has a body, a product of Māyā, as a means of
enlightenment. The eternal
union of the other Impurity with the soul is like the union of
firewood with fire. Firewood
is one with fire and conceals it within itself. Fire, though it
is one with firewood, does
not cease to exist.
3. The soul has five states,
waking, dreaming, dreamless sleep, ‘the fourth’, and ‘beyond
the fourth’: for when hidden
in Impurity it is formless.
(a) In the forehead the soul
is associated with twenty-five organs and five organs of sense
and five organs of action. In
the throat it leaves these ten. In the heart it is associated with
Citta. In the navel it leaves
Citta. In the mūlādhāra, the soul is alone without organs.
(b) The soul which has
reached the waking state in the forehead there experiences the
five states. In that position
it perceives by the several organs their respective objects, and
then withdraws from them.
That is similarly (fivefold).
ஐந்தாம் சூத்திரம்
விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்
தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்து அவையே
என்பது சூத்திரம்
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை : என் நுதலிற்றோ எனின், இவ்வான்மாக்களிடத்துத் தமது முதல் உபகாரம் உணர்த்துதல் நுதலிற்று.
முதல் அதிகரணம்
மேற்கோள் : ஈண்டு, ஐ உணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது.
ஏது : அவற்றினான் ஆன்மா ஒன்றித்துக் காணின் அல்லது அவை ஒன்றையும் விடயியா ஆகலான்
உதாரணம் :
ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய் உளம்நிற்ப
ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம் - ஐம்பொறியில்
காணாதேல் காணாது காணும் உளம் காணாதேல்
காணாகண் கேளா செவி
இரண்டாம் அதிகரணம்
மேற்கோள் : இனி, இதுவும் தமது முதலாலே உணரும் என்றது.
ஏது : அவ் ஆன்மாத் தன்னாலே உணரும் இந்திரியங்களைப் போலத் தானும் தன்னை உணராது நிற்றலான்.
உதாரணம் :
மன்னுசிவன் சந்நிதியில் மற்று உலகம் சேட்டித்தது
என்னும் மறையின் இயல்மறந்தாய்-- சொன்ன சிவன்
கண்ணா உளம்வினையால் கண்டு அறிந்து நிற்கும்காண்
எண்ணான் சிவன் அசத்தை இன்று
வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
வெய்யோனை ஆகாத மீன்போல--- மெய்யவனில்
கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனைக்
கண்டு உடனாய் மன்னுதலைக் காண்
அருளுண்டாம் ஈசற்கு அதுசத்தி அன்றே
அருளும் அவன் அன்றி இல்லை-- அருளின்று
அவன் அன்றே இல்லை அருட்கண்ணார் கண்ணுக்கு
இரவிபோல் நிற்கும் அரன் ஏய்ந்து
FIFTH SUTRA
Though body, mouth, eye, nose
(and ear) perceive by the help of the soul, they do not
know. Like them, souls,
(though they know), by the grace of the God in their
knowing (do not know). They
are like the iron in the presence of the magnet.
1. The five senses perceive
by the help of the soul:
for unless the soul in union
with them perceives, they cannot perceive.
(a) When the soul like a king
is there ruling the five senses, the five senses do not know
the soul. The soul does not
perceive unless it perceives in the senses; and if the soul does
not perceive, the eye cannot
see and the ear cannot hear.
2. The soul knows by the help
of the Primal One:
for, like the sense-organs
which perceive by the help of the soul, the soul does not know
itself.
(a) Thou who hast forgotten
the passage of the Scriptures where it is said that the world is
active in the presence of
Śiva who abides for ever, understand that the soul with Śiva as
its enlightener has a
conscious experience according to its works. Śiva is not conscious of
the non-real, because the
non-real is nothing.
(b) Understand that as a star
shines, lost in the sunlight and yet not (the same as) the
sunlight, the soul perceives
the fire senses, seeing, hearing, tasting, smelling, feeling, in
Him who is True (neither one
with Him nor other than He), but in union with Him.
(c) The grace of Iśa is
eternally with Him. It is Śakti. Without Him grace does not exist;
without grace He does not
exist. To the knowledge of those enlightened by grace, Hara is
one (with His Śakti), as the
sun (is one with the sunlight)
affectionately,
gandhiram.
Comments
Post a Comment