21

 FREE WILL AND DETERMINISM:

Most of us feel human actions have some degree of freedom. However in terms of philosophical questioning this freedom is subjected to rigorous testing. In fact it is one of the fundamental questions in metaphysics!
Sivgnana bodham  sutra -2:

அவையே தானே யாய்இரு வினையில்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.

         
         
பொழிப்புரை( sivagnana dhesikar -dharumapuram adheenam)
அவையே தானேயா யென்பதனை இரட்டுற மொழிந்து கொண்டுரைக்க. இக்கருத்தேபற்றி "உலகெலா மாகிவேறாயுடனுமாய்என்றார் வழிநூலாசிரியரும். மேலைச்சூத்திரத்தின் சூஅந்தமாதிஎன்புழி விகாரத்தாற்றொக்க பிரிநிலையேகாரத்தான் விலக்கப்பட்டு நின்ற சேதனப் பிரபஞ்சத்தை ஈண்டு அவையெனச் சுட்டிக்கூறினார். 'ஒடுங்கியுளதாம்என்றதற்கேற்ப ஈண்டும் போக்கினை முற்கூறினார். புரிதல் எப்பொழுதும் மேற்கோடல். ஆணையினென்பது சிங்கநோக்காய் இருவினையென்பதனோடும் நீக்க மின்றி யென்பதனோடும் இயைந்து பொருள் தந்து நின்றது. ஆண்டு இன்னுருபு, முன்னர் ஏதுப்பொருட்கண்ணும், பின்னர் நீக்கப் பொருட்கண்ணுமாய் நின்றது. இன்னென்பது சாரியையெனக் கொண்டு ஈரிடத்தும் ஏற்கு முருபுகள் விரித்துரைத்தலுமொன்று.
அன்றே அசை; அநாதியே இவ்வாறு நிற்குமெனினும் அமையும். ஆய்ப் புரிய நிற்குமெனவே, அச்செயல்களெல்லாம் முதல்வன் கரணத்தானன்றிச் சங்கற்பமாத்திரத்தாற் செய்வனென்பது பெறப்பட்டது. இதனானே மேல் 'அந்தம்என்று உத்தேசமா யெடுத்துக் கொண்ட முதல்வனுக்கு இலக்கணங் கூறியவாறுமாயிற்று. இது தடத்தலக்கணமெனப்படும் பொதுவியல்பு. ஆணையினிருவினையினெனவே, தனது சிற்சத்தி துணைக்காரணம், இருவினையும் அதன்வழித்தாய துணைக்காரணம், இருவினையினெனவே அதற்குப் பற்றுக்கோ டுண்டென்பதூஉம் பெற்றாமாகலின், அது முதற்காரண மென்பதூஉம் இருவினையிற் போக்குவரவு புரியவெனவே ஒடுங்கியின் மீளவுளதாங்கால் இருவினைகட்கேற்பப் பலவேறு வகைப்பட்டு விரியுமென்பதூஉம் போந்தவாறு காண்க.
இதனுள் அவையேதானேயாய் என்பதோரதிகரணம்; ஆணையினிருவினையின் என்பதோரதிகரணம்; போக்கு வரவுபுரிய என்பதோரதிகரணம்; ஆணையினீக்கமின்றி நிற்குமன்றே என்பதோரதிகரணம்; ஆக நாற்கூற்றது இச்சூத்திரமெனக் கொள்க.


என்பது சூத்திரம் என்னுதலிற்றோவெனின், புனருற்பவம் வருமாறு உணர்த்துதனுதலிற்று.
என்பது கருத்துரை என்னுதலிற்றோவெனின், சூத்திரக்கருத்துணர்த்துதனுதலிற்று. இதன் பொருள். உலகம் ஒடுங்கியினின்றும் மீளவுளதாமாற்றை வகுத்துணர்த்து முகத்தானே துணைக்காரண முதலியன இல்வழி இறைவன் உலகிற்கு நிமித்தகாரணனாதல் சாலுமாறு யாங்ஙனம் என்னுங் கடாவை யாசங்கித்து அவற்றதுண்மைக்குப் பிரமாண முணர்த்துதனுதலிற்று இச்சூத்திரம் என்றவாறு.
சூத்திரவியைபும் இதனானே விளங்கும். ஒடுங்கியுளதாமென்றவழி ஒடுங்கியினின்றும் மீளவுளதாவது எவ்வாறென்று அவாய் நிற்றலின், அவ்வவாய்நிலைபற்றிப் புனருற் பவமே ஈண்டுக் கூறப்பட்டது.
இச்சூத்திரத்தின் பிண்டப்பொழிப்பு : மேலைச்சூத்திரத்து எடுத்துக்கொண்ட சங்காரகாரணனாகிய முதல்வன் கலப்பினால் உடலின் உயிர்போல் அவ்வுயிர்களேயாய், பொருட்டன்மையாற் கண்ணின் அருக்கன்போல் அவற்றின் வேறுமாய், உயிர்க்கு உயிராதற்றன்மையாற் கண்ணொளியின் ஆன்மபோதம்போல் உடனுமாய் நின்று, ஆணையென்னும் பரியாயப்பெயருடைய தனது சிற்சத்தியான் வரும் இருவினைகளான் அவை இறத்தல் பிறத்தல்களைப் புரியும் வண்ணம் அவ்வாணையிற் பிரிப்பின்றிச் சமவேதமாய் நிற்பன் என்றவாறு.
The second verse in sivagnana bodham is particularly important because it also points to  the persisting  human  preoccupation that is free will and determinism.

The verse says that the siva is in a state of two kind of relationships with the soul,
One with the souls
Away from the souls and independently
That is he stays away from the souls and yet inside the soul. This is a very difficult to imagine concept. The SGB says  it as an AWAYE-THANE state. (அவையே தானே)

This awaye-thane position puts the soul in both self determined acts and the sivam controlled acts. Which is the one at a given time is not predictable. That means our actions are at a partially controlled state.

The sivam has the power eternally to do this mysterious duty.
Man is eternally confused about his free will over his acts. He is destined to be so. He has to accept this. His “vinais” are not completely his own and it has its commands from the sivam.
So, the second verse of SGB clears the major hurdle in our philosophizing. That is man is not master of his own house.




Comments

Popular posts from this blog